பூட்டிய வீட்டில் திருடியவர் கைது

பூட்டிய வீட்டில் திருடியவர் கைது

Update: 2021-12-03 22:45 GMT
நெல்லை:
நெல்லை தாழையூத்து விநாயகர் நகர் பூந்தோட்ட தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 59). இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 29 -ந்தேதி கணேசனின் சகோதரரான ராமசாமி, வீட்டை பார்த்தபோது வீட்டின் பின்வாசல் அருகே இருந்த ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டில் இருந்த வெள்ளி மற்றும் வெண்கல பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கணேசன் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாழையூத்து, சாரதாம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற மணிகண்டன் (31) என்பவரை நேற்று கைது செய்தனர். பணம் மற்றும் வெள்ளி மற்றும் வெண்கல பொருட்கள் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்