திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்; முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்ற வாகனங்கள்

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Update: 2021-12-03 20:43 GMT
தாளவாடி
தாளவாடியை அடுத்த திம்பம் மற்றும் ஆசனூர் பகுதியில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதேபோல் கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது. குறிப்பாக 27-வது கொண்டை ஊசி வளைவு முதல் 15-வது கொண்டை ஊசி வளைவு வரை பனிமூட்டம் அதிக அளவில் இருந்தது. 
இதன்காரணமாக வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை திம்பம் மலைப்பகுதியில் இயக்கினர். வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்தபடி சென்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
மேலும் மலைப்பகுதி முழுவதும் மேகமூட்டம் சூழ்ந்து இருந்ததால் தாளவாடி பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது போல் காட்சி அளித்தது. இதேபோல் தலமலை, கேர்மாளம், ஆகிய பகுதிகளிலும் பனி மூட்டம் நிலவியது.

மேலும் செய்திகள்