பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் - மாணவர்கள் அவதி
இடைக்கழிநாடு பேரூராட்சியில் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் - மாணவர்கள் அவதி.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. கடந்த வாரங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பள்ளி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இ்தனால் மாணவர்களால் பள்ளிக்கு வர இயலவில்லை.
பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.விடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் முன்வந்து பள்ளியில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.