சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா, புதுர்மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 26). இவரது மனைவி சந்தியா (24). கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் சந்தியாவை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எரும்பி பகுதியில் சென்றபோது வலி அதிகமானதால் ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் பிரியா பிரியா பிரசவம் பார்த்தார். அப்போது 3.50 மணிக்கு சந்தியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.