மோகனூரில் விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

மோகனூரில் விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

Update: 2021-12-03 17:13 GMT
மோகனூர்:
மோகனூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 27). பெயிண்டர். இவருடைய மனைவி சோனியா 23. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் ஒரு மகள் உள்ளார். 
இந்த நிலையில் ஜெயபாலுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயபால் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். 
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் ெஜயாலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து மனைவி சோனியா மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்