மின்வாரிய அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பழனியில் மின்வாரிய அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-03 16:23 GMT
பழனி: 

பழனி ஆர்.எப். சாலையில் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி அளவில் மின்வாரிய அலுவலர்கள் திடீரென்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனி மின்வாரிய அலுவலர் ஆனந்த் என்பவரை தாக்க முயற்சி செய்த மின்வாரிய ஊழியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.  
இதற்கிடையே தகவலறிந்த பழனி டவுன் போலீசார் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்