அனுப்பர்பாளையம்,
சென்னையில் இருந்து திருப்பூருக்கு உணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று அதிகாலை அவினாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டி வந்தார். திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய அந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதையத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று டிரைவரை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்த வாகனத்தை கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினார்கள். இந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார். அதில் கொண்டு வரப்பட்ட உணவு பொருட்கள் மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.