2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு சுமார் 625 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது