நெல்லை:
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட உலகம்மன் கோவில் தெரு பகுதிக்கு நேற்று குடிநீர் வரவில்லை. இதனால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் தமிழ்ப்புலிகள் கட்சி கரும்புலி குயிலி பேரவை மாவட்ட செயலாளர் தச்சை மாடத்தி தலைமையில் காலிக்குடங்களுடன் தச்சநல்லூர் வார்டு அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மோட்டார் பழுதடைந்ததின் காரணமாக குடிநீர் வழங்க முடியவில்லை, உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது. உடனடியாக தச்சநல்லூர் உலகம்மன் கோவில் தெருவுக்கு லாரி மூலமாக மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.