சங்கரன்கோவிலில் பரிதாபம் கண்மாயில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

கண்மாயில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

Update: 2021-12-02 19:49 GMT
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாமஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் மாரிசெல்வம் (வயது 14), அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவன் நேற்று மாலையில் தன்னுடைய நண்பர்களுடன் அங்குள்ள புளியம்பட்டி கண்மாயில் குளிக்க சென்றான். அப்போது மாரிசெல்வம் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.
இதனைப் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, மாரிசெல்வத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் தண்ணீரில் மூழ்கிய மாரிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விரைந்து சென்று, இறந்த மாரிசெல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்