பஸ்சில் லாட்டரி சீட்டு கடத்தியவர் கைது

பஸ்சில் லாட்டரி சீட்டு கடத்தியவர் கைது

Update: 2021-12-02 19:43 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த பஸ்சில் சந்தேகப்படும்படியாக இருந்தவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.21 ஆயிரத்து 600 மதிப்பிலான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் முட்டை காம்பவுண்டு பெரிய தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 51) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்