நல்லூரில் ரேஷன் கடை முன்பு படுத்திருந்த டீ மாஸ்டர் சாவு போலீசார் விசாரணை
நல்லூரில் ரேஷன் கடை முன்பு படுத்திருந்த டீ மாஸ்டர் சாவு போலீசார் விசாரணை
கந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் நல்லூரில் உள்ள ரேஷன் கடை முன்பு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் ஆண் இறந்து கிடப்பது தொடர்பாக நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகரை சேர்ந்த ஜஹாங்கீர் உசேன் (வயது 50) என்பது தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத இவர் கந்தம்பாளையத்தில் உள்ள பல்வேறு டீக்கடைகளில் டீ மாஸ்டராக வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் ஒரு டீக்கடையில் கிடைத்த ஒரு செல்போன் எண் மூலம் ஜஹாங்கீர் உசேனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டீ மாஸ்டர் இறப்புக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.