அறுவை சிகிச்சைக்கு பிறகு உத்தவ் தாக்கரே ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்

அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.

Update: 2021-12-02 17:02 GMT
படம்
மும்பை, 

அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.

வீடு திரும்பினார்

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கழுத்து வலியால் அவதி அடைந்து வந்தார். எனவே அவர் கடந்த மாதம் 10-ந் தேதி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 12-ந் தேதி அவருக்கு முதுகுதண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அவர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவர் 22 நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளார். இதுகுறித்த தகவலை முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், "முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ரிலையன்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து இன்று (நேற்று) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்கு உத்தவ் தாக்கரேயை வீட்டில் இருந்தபடி வேலை செய்யுமாறு அறிவுறுத்தி இருப்பதாக ரிலையன்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர் அஜித் தேசாய் கூறியுள்ளார்" என கூறப்பட்டுள்ளது.

 குளிர்கால கூட்டத்தொடர்

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளும் வகையில் நாக்பூரில் நடைபெறும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விமானப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்