பந்தலூர் அருகே ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை

பந்தலூர் அருகே ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை

Update: 2021-12-02 14:57 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே உள்ள நூலக்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆடுகளை கொட்டகைக்குள் அடைத்துவிட்டு  சந்திரன் தூங்க சென்றார். நள்ளிரவில் திடீரென ஆடுகளின் சத்தம் கேட்டது.

 இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வெளியே வந்து பார்த்தபோது, 2 ஆடுகள் இறந்து கிடந்தது. மேலும் அங்கிருந்து சிறுத்தை ஒன்று ஓடியது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பிதிர்காடு வனவர் பரமேஸ்வரன், வனகாப்பாளர் மாறன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

 அப்போது சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்தது. இதனால் ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது தெரியவந்தது. சிறுத்தையின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்