குன்னூர் அருகே உடல்நிலை பாதித்த ஆண் கரடி உயிரிழப்பு

குன்னூர் அருகே உடல்நிலை பாதித்த ஆண் கரடி உயிரிழப்பு

Update: 2021-12-02 14:57 GMT
குன்னூர்

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் அதிகமாக உள்ளன. தேன் மற்றும் எண்ணெய் பொருட்களை தேடி கோவில்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி உலா வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள பாரஸ்ட் டேல் பகுதியில் கரடி ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சுமார் 1½ வயதான ஆண் கரடி உயிரிழந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் உதவியுடன் கரடியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில் கரடி உடல் நலம் பாதித்து உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் கரடியின் உடல் அதே பகுதியில் எரிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்