ஊராட்சி தலைவர்கள் உண்ணாவிரத போராட்டம்

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது

Update: 2021-12-02 13:11 GMT
கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

 துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அளவில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் பாரத பிரதமரின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து பறிப்பது மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணி ஆணைகளை வழங்காமல் நீட்டிப்பது போன்றவற்றை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டம் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

மேலும் செய்திகள்