தூத்துக்குடி மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ பணியாளர்கள் படகில் வீடுவீடாக சென்று இல்லம் தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கினர்

தூத்துக்குடி மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ பணியாளர்கள் படகில் வீடுவீடாக சென்று இல்லம் தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கினர்

Update: 2021-12-02 11:57 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ பணியாளர்கள் படகில் வீடுவீடாக சென்று இல்லம் தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கினர்.
கனமழை
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கடந்த 25-ந் தேதி கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக ரக்மத் நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. 
இதனால் இந்த பகுதியில் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
படகில்..
இந்த முகாமுக்கு வந்த  இல்லம் தேடி மருத்துவம் குழுவினர் தண்ணீர் தேங்கி இருந்ததால் படகுகள் மூலம் வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கினர். 
நோய் பரவலை தடுக்கும் வகையில் களிம்புகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் களையும் வீடு வீடாக வினியோகித்தனர். சுமார் 100 வீடுகளில் நோய் தடுப்பு மருந்துகளை கொடுத்தனர்.
தினமும் ஒவ்வொரு பகுதியாக சுகாதார பணிகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்