டாஸ்மாக் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்

டாஸ்மாக் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்

Update: 2021-12-01 22:02 GMT
நெல்லை:
ஆலங்குளத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலைபார்க்கும் மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் கடையில் இருந்து 30 அடி தூரத்தில் உள்ள ஒரு அறையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி 36 அட்டைப்பெட்டிகளில் இருந்த 1,188 மதுபாட்டில்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இதுகுறித்து நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சியாம்சுந்தர் விசாரணை நடத்தி கடை மேற்பார்வையாளர்கள் முருகன், சுப்பையா, சமுத்திரபாண்டியன், விற்பனையாளர்கள் சரவணன், கணேசன், உதவி விற்பனையாளர் இசக்கிமுத்து ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்