கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

Update: 2021-12-01 21:55 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் ஆஸ்பத்திரி அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 35), மீனாட்சிபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (32) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்