எலக்ட்ரீசியன், ஆற்றில் பிணமாக மீட்பு

புதுக்கடை அருகே காணாமல் போன எலக்ட்ரீசியன் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-12-01 21:34 GMT
புதுக்கடை:
புதுக்கடை அருகே காணாமல் போன எலக்ட்ரீசியன் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
எலக்ட்ரீசியன்
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 49), எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மலர்விழி (45), அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி கிணத்தடி தாவு ஆற்றங்கரையோரத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் விஜி கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
ஆற்றில் பிணமாக மீட்பு
உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இந்தநிலையில் நேற்று காலை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், பிணமாக மீட்கப்பட்டவர் 29-ந் தேதி காணாமல் போன விஜி என்பது தெரியவந்தது. ஆற்றில் அடித்து செல்லப்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சோகம்
மேலும் இதுதொடர்பாக புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காணாமல் போனவர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்