மைனர் பெண்ணை கற்பழிக்க முயற்சி; தொழிலாளி கைது
கல்கட்டகியில், மைனர் பெண்ணை கற்பழிக்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
உப்பள்ளி: கல்கட்டகியில், மைனர் பெண்ணை கற்பழிக்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மைனர் பெண்ணை கற்பழிக்க முயற்சி
தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா குருடஒன்னள்ளி குடியிருப்பு பகுதியில் 16 வயது மைனர் பெண் ஒருவள் வசித்து வருகிறாள். இவள், 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளாள். இவளது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இதேபோல் அதேப்பகுதியை சேர்ந்தவர் சன்ன பசய்யா(வயது 26). கட்டிட தொழிலாளியான இவர், மைனர் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்டு வீட்டில் மைனர் பெண் தனியாக இருப்பதை அறிந்து உள்ளே புகுந்துள்ளார்.
அங்கு சன்ன பசய்யா, மைனர் பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார். இதற்கு மைனர் பெண் எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் சன்ன பசய்யா, மைனர் பெண்ணை கற்பழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நடந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என்று மைனர் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
கைது
இருப்பினும் மைனர் பெண், பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கதறி அழுதபடி கூறியுள்ளாள். இதைகேட்டு மைனர் பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கல்கட்டகி புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சன்ன பசய்யாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.