உரிய ஆவணங்களின்றி இயங்கிய 9 வாகனங்கள் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி இயங்கிய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-12-01 20:01 GMT
தென்காசி:
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் ஆலோசனையின்படி, செங்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் திடீர் வாகன சோதனை நடத்தினார். அப்போது உரிய ஆவணங்கள், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் 5 வாகனங்கள், 3 சரக்கு வாகனங்கள், ஒரு மினி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்