மோட்டார் சைக்கிள் திருட்டு போனது

கோவில் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது

Update: 2021-12-01 19:34 GMT
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தா.பழூர் சிவன் கோவில் முன் நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து தா.பழூர் போலீசில் ஜெயபால் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்