கிணற்றில் விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு
அருப்புக்கோட்டையில் கிணற்றில் விழுந்த முதியவரை உயிருடன் மீட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை வடுகர்கோட்டை சாது ராமசாமி நாயக்கர் தெருவில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த ஆண்டார் (வயது 61) என்பவர் விழுந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த ஆண்டாரை உயிருடன் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.