தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தாமரைக்குளம்
மத்திய அரசு குறைத்தும், பெட்ரோல்-டீசல் விைல உயர்வை குறைக்காத தமிழக அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், பா.ஜ.க.அமைப்பு சாரா தொழிலாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பார்வையாளர் அய்யாரப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கி பேசுகையில், பெட்ரோல்-டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு இன்னும் ஏன் குறைக்கவில்லை. உங்கள் மீது தவறை வைத்துக் கொண்டு எங்களை எதற்காக பேசுகிறீர்கள். வேறு எந்த மாதிரி கேட்டால் செய்வீங்க. சொல்லுங்க, ஒரு வாரத்தில் செய்து காண்பிக்கிறோம். மத்திய அரசு ரெடியாக உள்ளது. நாங்கள்தான் நிறுத்தி வைத்துள்ளோம் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அருண்பிரசாத், கோகுல்பாபு, நந்தினி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சுரேஷ், வழக்கறிஞர் பிரிவு தலைவர் செந்தில்குமார், நகர தலைவர் வைரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.