பள்ளிபாளையம் அருகே சாராயம் விற்றவர் கைது

பள்ளிபாளையம் அருகே சாராயம் விற்றவர் கைது

Update: 2021-12-01 17:46 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியில் பள்ளிபாளையம் ேபாலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது ஓடப்பள்ளி குப்பியண்ணன் கோவில் அருகே ஒருவர் கேனுடன் நிற்பதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் சேலத்தை சேர்ந்த சின்னதம்பி (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பிளாஸ்டிக் பாட்டிலில் 20 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சின்னதம்பியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
====

மேலும் செய்திகள்