நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 53,494 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று புதிதாக மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 534 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று 32 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 52,544 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 506 பேர் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள 484பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.