வீடு இடிந்து விழுந்து கணவன்-மனைவி காயம்
வீடு இடிந்து விழுந்து கணவன்-மனைவி காயம்
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா நம்பிதாங்கல் கிராமத்தைசேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 71). அவரது மனைவி கண்ணம்மாள் (61). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை ஓட்டுவீடு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த கணவன்- மனைவி இருவரும் காயம் அ’ைந்தனர். அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்டுள்ளனர். தகவலறிந்த கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி சென்று காயமடைந்த இருவரையும் கலவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர்கள் மேல்சிக்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இருவருக்கும் மழையூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராமமூர்த்தி நிவாரண உதவி வழங்கினார். மேலும் கலைவ தாசில்தார் சமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரி ஷோபனாராசன்ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்கள்.