நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த விவசாயி கைது

கடம்பூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-01 17:23 GMT
கடம்பூர் கரளையம் அருகே உள்ள பஸ் நிறுத்த பகுதியில் கடம்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு நபர் கையில் பையுடன் சந்தேகப்படும் படி நின்றிருந்தார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். இதில் அவர் 11 நாட்டு வெடிகுண்டு்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கடம்பூர் ஏலஞ்சி புதுக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த ஜடையப்பன் (வயது 61) என்பதும், விவசாயியான இவர் தனது தோட்டத்தில் பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கொல்ல இந்த நாட்டு் வெடிகுண்டு்களை வாங்கிக்கொண்டு ஊருக்கு செல்ல பஸ் ஏற நின்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்