தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-12-01 17:00 GMT


சாலையில் புதைக்குழி 

கோவை திருச்சி ரோடு ரெயின்போ குடியிருப்பு அருகில் அமைக்கப்பட்டு உள்ள மேம்பால சர்வீஸ் ரோடு குண்டும் குழி யுமாக மாறி புதைக்குழி போன்று காட்சியளிக்கிறது. இந்த சாலை யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் சாலை புதைக்குழி போன்று காட்சியளிப்பதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
முத்துசாமி, கோவை.

புதர்கள் ஆக்கிரமிப்பு

  கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி சார்பில் நகர்ப்புற சுகா தார மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் வளாகத் தில் ஏராளமான புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. தினமும் இங்கு ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில் அங்கு புதர்கள் வளர்ந்து உள்ளதால், அங்கு விஷப்பூச்சிகள் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மையத்தில் வளர்ந்து உள்ள புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.
  செந்தில், கோவை.

போக்குவரத்து பாதிப்பு

  பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை புறவழிச்சாலை வழியாக திருப்பி விட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சூர்யா, பொள்ளாச்சி

வாகன ஓட்டிகள் அவதி

  பொள்ளாச்சி பல்லடம் ரோடு டி.கோட்டாம்பட்டி அண்ணா நகர் வழியாக கள்ளிப்பாளையத்திற்கு செல்லும் சாலையை பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே சாலை பணிகளை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.
  கோபி, டி.கோட்டாம்பட்டி.

சேறும் சகதியுமான சாலை

  கோவை சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அத்துடன் தற்போது பெய்த மழை காரணமாக இந்த சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பிச்செல்கிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  வினோத்குமார், சின்னமேட்டுப்பாளையம்.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
மயானம் சுத்தம் செய்யப்பட்டது

  நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் மயானம் உள்ளது. இந்த மயானம் புதர்மண்டி கிடந்ததால், உயிரிழந்தவர்களை கொண்டு செல்லும்போது பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்தை சுத்தம் செய்து உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
சந்திரசேகர், தேவாலா. 

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை மாநகராட்சி 87-வது வார்டு குனியமுத்தூர் திரு வள்ளுவர் நகரில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை. இதனால் அதன் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் இந்த கழிப்பிடத்தில் கால்நடைகள் ஆக்கிரமித்து உள்ளன. எனவே அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பிடத்தை அகற்ற வேண்டும்.
  அருள் பாக்கியராஜ், திருவள்ளுவர் நகர்.

பாம்புகளின் புகலிடம்

  கோவை அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவனூர் புதூர் 5-வது வார்டு விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாய் இடிந்து உள்ளது. பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. அங்கு முட்புதர்கள் சூழ்ந்து இருப்பதால் விஷப்பாம்புகளின் புகலிடமாக காட்சியளிக்கிறது. இதன் அருகில் உள்ள மைதானத்தில் குழந்தைகள் விளையாடி வருவதால், ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து முட்புதர்களை அகற்றுவதுடன், சாக்கடை கால்வாயை சரிசெய்ய வேண்டும்.
  ராமமூர்த்தி, கோவனூர் புதூர்.

மழைநீர் தேக்கம்

  கோவை மாம்பள்ளி கருப்பராயன்கோவில் தோட்டத்தில் தெருக்களில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது. அவை வெளியே செல்ல வழியில்லாததால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே தொற்றுநோய் பரவுவதை தடுக்க உடனடியாக அங்கு சூழ்ந்து நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சம்பூர்ணம், மாம்பள்ளி.

ஒளிராத மின்விளக்கு

  கோவை கணபதி 41-வது வார்டு அலமேலுமங்காபுரம் அருகே உள்ள விநாயகர் கோவில் வடக்கு பக்கம் இருக்கும் மின்விளக்கு ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மின்விளக்கை ஒளிர செய்ய வேண்டும்.
  சிவகாமி நடராஜன், அலமேலுமங்காபுரம். 

சீரான குடிநீர் வேண்டும்

  வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரம் கிருஷ்ணசாமி நகரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப் படவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால் குழாய் உடைந்துவிட்டது என்று கூறுகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான வகையில் குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
  கிருஷ்ணசாமி, மகாலிங்கபுரம்.

மேலும் செய்திகள்