மணலூர்பேட்டையில் அடிப்படை வசதிகள் கேட்டு பா.ஜ.க.வினர் சாலை மறியல்

மணலூர்பேட்டையில் அடிப்படை வசதிகள் கேட்டு பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2021-12-01 16:46 GMT
திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பேரூராட்சி 15-வது வார்டில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  இந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும், 

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக் கோரியும் திருக்கோவிலூர் - மணலூர்பேட்டை சாலையில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுமார் 30 பேர் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மணலூர்பேட்டை போலீசார், விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில்,  உரிய துறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். 

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடட அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்