சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்தி சென்ற 3 லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-12-01 15:55 GMT
சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்தி சென்ற 3 லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிராவல் மண் கடத்தல்
சென்னிமலை அருகே வாய்ப்பாடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் லாரிகளில் கிராவல் மண் கடத்தி செல்லப்படுவதாக சென்னிமலை வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சென்னிமலை நில வருவாய் அதிகாரி முத்துலட்சுமி, வாய்ப்பாடி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் (பொறுப்பு) மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் வாய்ப்பாடி பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து சென்றதும், லாரிகளின் உரிமையாளர்கள் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
3 லாரிகள் பறிமுதல்
பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் லாரி டிரைவர்களிடம் உரிய ஆவணங்களை கேட்டனர். அப்போது லாரி டிரைவர்கள் 3 பேரும் நைசாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதன்பின்னர் 3 லாரிகளையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்