கயத்தாறு அருக கல்லூரி மாணவரை தாக்கிய 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்

கயத்தாறு அருக கல்லூரி மாணவரை தாக்கிய 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்

Update: 2021-12-01 11:45 GMT
கயத்தாறு:
கயத்தாறு அருகேயுள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ஸ்டீபன் மகன் சாத்ராக்(வயது17). இவர் கோவில்பட்டியிலுள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும், 17 வயது சிறுவனும் சில நாட்களுக்கு முன்பு ஊரை விட்டு தலைமறைவாகி விட்டனராம். இதற்கு சாத்ராக் குடும்பத்தினர் காரணம் என பெண்ணின் உறவினரான முருகன்(45) சந்தேகமடைந்து, அவரது நண்பர்கள் சிலருடன் சென்று சாக்ராக்கை அடித்து உதைத்தாராம். இதில் பலத்த காயமடைந்த சாத்ராக் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், சண்முகராஜ்(25), கோபிநாத், சிவராஜதுரை, சண்முகம், காளிராஜ் ஆகிய 6 பேரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்