புகார்பெட்டி

தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-30 20:26 GMT
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
விருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி சேடப்பட்டி கிராமத்தில் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் உள்ளது. இதன் காரணமாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. ெகாசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
வீரா, சேடப்பட்டி.
தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை மாவட்டம் முல்லைநகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே, உடனடியாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். 
மணிகண்டன், மதுரை. 
குண்டும், குழியுமான சாலை 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் நத்தத்துப்பட்டி கிராமத்தில் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலுசாமி, நத்தத்துப்பட்டி. 
சுகாதார சீர்கேடு 
மதுரை 98-வது வார்டு மகாலட்சுமி காலனி, இந்திராகாந்தி தெரு, வ.உ.சி. 1-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து குளம் போல தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாக உள்ளது. பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கொசுக்கடியால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
ஆனந்தன், மதுரை. 
கால்வாய் தூர்வாரப்படுமா? 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் குருசாமிபுரம் இனாம்கரிசல்குளம் கிராமத்தில் உள்ள தண்ணீர் வரத்து கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. மேலும் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே, வரத்து கால்வாயை தூர்வார வேண்டும். 
தேன்கனி, ஸ்ரீவில்லிபுத்தூர். 
பொதுமக்கள் அவதி 
சிவகங்கை மாவட்டம் பி.எஸ்.ஆர். நகரில் சாய்பாபா கோவில் அருகில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் இரவு தூங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவார்களா? 
குகன், சிவகங்கை. 
பன்றிகள் தொல்லை 
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. அவைகள் சாக்கடையில் படுத்து விட்டு சேறும், சகதியுமாக தெருக்களில் உலா வருகின்றன. இவ்வாறு தெருவில் சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கார்த்தி, திருப்புல்லாணி. 
மீண்டும் பஸ் இயக்கப்படுமா? 
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்பெருமாள்நகர் வழியாக குலசேகரன்கோட்டைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த சாலை மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த மோசமான சாலையை காரணம் காட்டி இவ்வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டுவிடடது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைத்து மீண்டும் பஸ் இயக்கப்படுமா? 
ஜெயரூபன்சுந்தர். தென்கரை. 
அடிப்படை வசதி 
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கீழராஜகுலராமன் கிராமம் ஸ்ரீசிவம் நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை, மின்கம்பம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுெதாடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. பொதுமக்களின் நலன்கருதி இங்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுமா? 
காளிராஜ், கீழராஜகுலராமன். 
நாய்கள் தொல்லை 
மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்தும் போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 
முருகன், பேரையூர். 
எரியாத தெருவிளக்குகள் 
மதுரை மாநகராட்சி 88-வது வார்டு சுப்பிரமணியபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளி அருகில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்களும், மாணவ, மாணவிகளும் செல்ல அச்சம் அடைகின்றனர். திருட்டு சம்பவமும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். 
அருண், சுப்பிரமணியபுரம்.
குரங்குகள் அட்டகாசம் 
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் ஊராட்சி மற்றும் வில்லாரேந்தல் மண்டலகோட்டை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. கொய்யா மற்றும் வாழை மரங்களை சேதபடுத்தி வருகின்றன. மேலும் மக்களையும் கடிக்க துரத்துகின்றன. அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும்.
பரக்கத்அலி, வெள்ளையபுரம். 

மேலும் செய்திகள்