விவசாயி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
விவசாயி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). விவசாயி. கடந்த 28-ந்தேதி ஆறுமுகம் மாடுகளை மேய்ச்சல் முடித்து வெள்ளாங்குழி அருகே வந்து கொண்டிருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கங்காதரன் என்பவரை கைது செய்தார்.
மேலும் இந்த கொலை வழக்கில் வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த சங்கர், மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரையும்நேற்று கைது செய்தனர்.