நெல்லை அருகே 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
சேரன்மாதேவி 4-வது தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் மாயாண்டி என்ற கட்ட மாயாண்டி (வயது 25). முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் டெல்வின் அந்தோணி (33). இவர்கள் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் சுத்தமல்லி, முக்கூடல் போலீஸ் நிலையங்களில் உள்ளது. இதனால் இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், முக்கூடல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகாதேவி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை நேற்று சுத்தமல்லி, முக்கூடல் போலீசார் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.