திசையன்விளை அருகே குளத்தில் மூழ்கி மாணவன் சாவு

குளத்தில் மூழ்கி மாணவன் சாவு

Update: 2021-11-30 20:03 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே பெட்டைக்குளம் கீழத்தெரு காலனியை சேர்ந்தவர் முத்துக்கண்ணன். இவருடைய மகன் முத்து விக்னேஷ் (வயது 8). அங்குள்ள பள்ளியில் 3-வது வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள சிறுகுளம் மறுகால்மடை அருகே குளித்துக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக மடையில் உள்ள கலுங்கில் சிக்கி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே முத்து விக்னேஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்