பாலக்கோடு அருகே சூதாடிய 13 பேர் கைது
பாலக்கோடு அருகே சூதாடிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கோபால்கொட்டாய் பகுதியில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சூதாடி கொண்டிருந்த குமார்(வயது34), சதீஸ்(29), ஆனந்தன்(46), சிவன்(32) உள்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 கார் மற்றும் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.