அரியலூரில் 5 கடைகளுக்கு ‘சீல்’

அரியலூரில் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2021-11-30 19:31 GMT
அரியலூர்:
அரியலூர் நகராட்சி காந்தி மார்க்கெட்டில் 51 கடைகளும், பஸ் நிலையத்தில் 50 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் பல கடைகளின் உரிமையாளர்கள் வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நகராட்சி வருவாய் துறையினர் கடை உரிமையாளர்களிடம் நேரில் சென்று வாடகை பாக்கியை கேட்டதோடு, தபால் மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து பலர் பகுதி அளவு தொகையை செலுத்திவிட்டு, சில நாட்களில் முழு தொகையும் செலுத்துவதாக கூறியுள்ளனர். ஆனால் 5 கடைகளின் உரிமையாளர்கள் மட்டும் எந்தவித தகவலும் தராமலும், நிலுவைத் தொகையை செலுத்தாமலும் இருந்துள்ளனர். இதையடுத்து நேற்று நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி மேற்பார்வையில் ஊழியர்கள் பஸ் நிலையத்தில் ஒரு கடையையும், காந்தி மார்க்கெட்டில் 4 கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

மேலும் செய்திகள்