வேப்பனப்பள்ளி அருகே நெல் வயலில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

வேப்பனப்பள்ளி அருகே நெல் வயலில் பதுங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2021-11-30 17:10 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரிய சூலமலை கிராமத்தில் சிவா என்பவரது வயலில் நெல் அறுவடை செய்யும் பணியில் நேற்று விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வயலில் 10 அடி நீள மலைப்பாம்பு நெற்கதிருக்குள் பதுங்கி இருந்தது. மலைப்பாம்பை கண்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அலுவலர்கள் அன்பரசன், சண்முகசுந்தரம், ராமன், சுப்ரமணி ஆகியோர் விரைந்து வந்து மலைப்பாம்பை  பிடித்து மகாராஜகடை வனப்பகுதியில் விட்டனர். 

மேலும் செய்திகள்