திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர்

திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர்

Update: 2021-11-30 17:06 GMT
அரசூர்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. மேலும் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களையும் சூழ்ந்தது.

இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. இதனால் மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவிகள் நலன் கருதி பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்