நிதிநிறுவன ஊழியர் தற்கொலை

நிதிநிறுவன ஊழியர் தற்கொலை

Update: 2021-11-30 15:51 GMT
நிதிநிறுவன ஊழியர் தற்கொலை
கோவை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31). இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ந் தேதி விஜயகுமார் கோவை வந்தார். அவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். 


இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருடைய அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டிபார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயகுமார் தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர் அளித்த தகவலின்பேரில் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்