மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு

Update: 2021-11-29 22:18 GMT
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் அங்குள்ள வடக்கு ரதவீதியில் மின்கோளாறை சரிசெய்வதற்காக மின்கம்பத்தில் ஏறினார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கருக்கு கிருஷ்ணகுமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
இதுபற்றி தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உயிரிழந்த பாஸ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது பாஸ்கர் மனைவிக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யுமாறு அவரது குடும்பத்தார் கேட்டுக்கொண்டார்கள். மாவட்ட கலெக்டரிடம் அது பற்றி பேசி அரசு உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார். களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்