லாட்டரி சீட்டுகள், கஞ்சா விற்ற 6 பேர் கைது

லாட்டரி சீட்டுகள், கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-11-29 19:12 GMT
அறந்தாங்கி
அறந்தாங்கி போலீசார் நேற்று ரெத்தினக்கோட்டை ரெயில்வே கேட், தினசரி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக பழனிமுருகன் (வயது 24), சேக்தாவூத் (54), சிவஞானம் (40), அய்யாசாமி (41), மணிமாறன் (41) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதேபோல, அறந்தாங்கி பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றதாக  கவிபாரதி (20) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்