கண்மாயில் உடைப்பால் தரைப்பாலம் மூழ்கியது

கண்மாயில் உடைப்பால் தரைப்பாலம் மூழ்கியது.

Update: 2021-11-29 18:01 GMT
சிவகங்கை, 
தொடர்மழையால் சிவகங்கை பகுதியில் செல்லும் உப் பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரியகோட்டை கண்மாய் கரை உடைந்து கள்ளர்குளம் செல்லும் தரைப் பாலம் மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட கவுன்சிலர்கள் பில்லூர் ராமசாமி, கோமதி தேவராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஸ்ரீதரன், ஊராட்சி தலைவர் ராஜாத்தி சேகர் ஆகியோர் அந்த பகுதியில் தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடன டியாக அடைக்க நடவடிக்கை எடுத்தனர். இதை தொடர்ந்து பொதுப் பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மணல் மூடைகளை அடுக்கி ரோடு களில் தண்ணீர் வெளியேறாமல் தடுத்தனர். இதே போல வேம்பத்தூர் அரசு உயர்நிலைபள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் வகுப்புக்களுக்கு மாணவ-மாணவிகள் செல்லமுடியாத நிலை உள்ளது‌. இதையடுத்து எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த பகுதியினரிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்