திருப்பூரில் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர்,
திருப்பூரில் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
வடமாநில வாலிபர்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் மண்டல் (வயது 25). இவர் 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வேலை செய்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி வேலை செய்தாள். சிறுமியிடம திருமணம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று கோவிலில் திருமணம் செய்த ரஞ்சித் மண்டல் சிறுமியுடன் குடும்பம் நடத்தினார். இதில் சிறுமி கர்ப்பமாக்கினாள்.
இந்தநிலையில் ரஞ்சித் மண்டல் சிறுமியை விட்டு விட்டு பீகார் ஓடிவிட்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் ரஞ்சித் மண்டலுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றதை மறைத்து சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ மற்றும் குழந்தை திருமணம், கடத்தல் ஆகிய பிரிவின் கீழ் ரஞ்சித் மண்டல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி, போக்சோ குற்றத்துக்கு ரஞ்சித் மண்டலுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், கடத்தலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.