பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜனதா கட்சியினர் போராட்டம் 3 பெண்கள் உள்பட 45 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-29 16:40 GMT
திருவாரூர்:-

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. இதேபோல் பல மாநிலங்களிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜனதா கட்சி அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று பா.ஜனதா கட்சியினர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். 

45 பேர் கைது 

மாவட்ட தலைவர் ராகவன் முன்னிலை வகித்தார். இதில் பட்டியல் அணி மாநில நிர்வாகி உதயகுமார், மாநில விவசாய அணி செயலாளர் கோவி சந்துரு, மாவட்ட பொதுச்செயலாளர் துரைஅரசு, மாவட்ட துணைத்தலைவர் செந்தில் அரசன், ஊடக பிரிவு செயலாளர் ரவி, நகர தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் அலுவலக வாசலை முற்றுகையிட்டு கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்