ஈரோடு கருங்கல்பாளையத்தில் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் தடுப்பு சுவரில் லாரி மோதியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-11-28 21:04 GMT
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் தடுப்பு சுவரில் லாரி மோதியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குண்டும், குழியுமான ரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் ஊராட்சி கோட்டை மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ரோட்டில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து ஈரோடு பவானி ரோட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்துக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. 
இந்த லாரியை ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
கருங்கல்பாளையம் காவேரி ரோடு பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே இந்த லாரி வந்து கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. 
இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும் விபத்து நடந்த இடம் குறுகிய ரோடு என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்