பவானியில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
பவானி, டி.என்.பாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
பவானி
பவானி, டி.என்.பாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
ரேக்ளா பந்தயம்
பவானியில் நகர தி.மு.க. இளைஞரணி, மாணவரணி ஆகியவற்றின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
அமைச்சர் சு.முத்துசாமி, தி.மு.க. நகர செயலாளர் ப.சீ.நாகராஜன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் போட்டியை தொடங்கிவைத்தனர்.
ஈரோடு குதிரை
இந்த பந்தயத்தில் ஈரோடு, சேலம், கோவை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான குதிரைகள் மற்றும் அதன் ஜாக்கிகளும் வந்திருந்தனர். இதில் உள்ளூர் குதிரைகளுக்கான போட்டி 8 கிலோ மீட்டர் தூர அளவுக்கு நடைபெற்றது. பவானி காடையாம்பட்டி பகுதியில் இருந்து தளவாய்ப்போட்டை வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருமாறு போட்டி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் முதல் பரிசை ஈரோடு குரூப் ஆப் சரவணன் நேஷனல் பவானி என்ற குதிரையும், பவானி கற்பக விநாயகர் சிங்காரவேல் என்ற குதிரை 2-வது இடத்தையும், பவானி குமாரபாளையம் ரேக்ளா பந்தயம் தலைவர் அஸ்வின் வெங்கட் குதிரை 3-வது இடத்தையும் பிடித்தது.
கோவை குதிரை
இதேபோல் 44 இன்ச் பெரிய குதிரைகளுக்கான போட்டி காடையாம்பட்டி முதல் ஒரிச்சேரி வரை 10 கிலோமீட்டர் தூரத்துக்கு நடந்தது. இந்த போட்டியில் கோவை கணேஷ் குதிரை முதல் இடத்தையும், ஆத்தூர் ஏ.வி.எம். குரூப் பச்சியம்மன் புல்லட் குண்டு குதிரை 2-வது இடத்தையும், திருச்சி தேவர் வம்சம் குதிரை 3-வது இடத்தையும் பிடித்தது.
3-வதாக நடுத்தர அளவு குதிரைகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஈரோடு குரூப் ஆப் சரவணன் நேஷனல் பவானி என்ற குதிரை முதல் இடத்தையும், கோவை ஆம்புலன்ஸ் பாமா கண்ணு சரவணன் என்ற குதிரை 2-வது இடத்தையும், கரூர் நவலடியான் ராஜேந்திரன் என்ற குதிரை 3-வது இடத்தையும் பிடித்தது.
பரிசளிப்பு விழா
இதைத்ெதாடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேயன் சேனாதிபதி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி, வர்த்தக அணியின் பொறுப்பாளர் சுப்பிரமணி, பெரியபுலியூர் பி.டி.ரமேஷ், நகர இளைஞர் அணியின் முன்னாள் அமைப்பாளர் தவமணி, மாவட்ட துணைச்செயலாளர் அறிவானந்தம், நகர இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் எம்.சிவபாலன் ஏற்பாட்டில் ரேக்ளா குதிரை பந்தயம் டி.என்.பாளையத்தில் குதிரை ரேக்ளா பந்தயம் நடந்தது. இதனை அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்..ஏ தொடங்கி வைத்தார். இதில் 14 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியானது டி.என்.பாளையம் அண்ணா சிலையில் தொடங்கி கணக்கம்பாளையம் அண்ணா சிலை வரை சுமார் 15 கி.மீ. தூரம் வரை நடந்தது. குதிரைகள் சீறிப்பாய்ந்து சென்றன. கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், வாணிபுத்தூர், டி.ஜி.புதூர்ர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று, கைதட்டி போட்டியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த போட்டியில் பவானி பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் என்வரது குதிரை கருப்பன் முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்துடன் கோப்பையை தட்டிச்சென்றது. 2-ம் பரிசாக சாதிக் என்பவர் ஓட்டி வந்த சுல்தான் என்கிற குதிரை ரூ.20 ஆயிரத்துடன் கோப்பையும், 3-ம் பரிசாக விஜயகுமார் ஓட்டி சென்ற சேவகன் என்ற குதிரை ரூ.15 ஆயிரத்துடன் கோப்பையும் வழங்கப்பட்டது. பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்த குருங்குருவி என்பவரது குதிரை ராக்கெட் 4-ம் பரிசை பெற்றது. மேலும் கோலப்போட்டியும் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி பரிசுகளையும், கேடயங்கள் வழங்கியும் பேசினார்.