நிரம்பி வழியும் ஏரி, குளங்கள்

அரியலூரில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

Update: 2021-11-28 20:06 GMT
அரியலூர்:

நீர்நிலைகள் நிரம்பின
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது வழக்கமாக பெய்யும் மழை அளவை விட இருமடங்கு அதிகம் ஆகும். அரியலூர் நகரில் உள்ள சந்தன ஏரி, செட்டி ஏரி, அய்யப்பன் நாயக்கன் ஏரி, சித்தேரி, பள்ளி ஏரி, பட்டு நூல்கார ஏரி, அரசு நிலையிட்டான் ஏரி உள்பட அனைத்து ஏரி, குளம், குட்டைகள், பொதுக்கிணறுகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் வெளியே செல்கிறது.நகரில் உள்ள பல சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. மார்க்கெட் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாததால் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் கடை வைத்துள்ள மொத்த காய்கறி வியாபாரிகள், இறைச்சி கடை வைத்திருப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இதனால் வியாபாரம் குறைந்து விட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
கால்வாய்களில் அடைப்பு
நகரின் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன், கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. நகராட்சி நிர்வாகம் மழை நின்றவுடன் விரைவாக நடவடிக்கை எடுத்து நகர்ப்பகுதிகளை சுத்தம் செய்து மழை நீரும், கழிவு நீரும் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

மேலும் செய்திகள்